சேரன்மகாதேவியில் சுகாதாரத் துறை, ஸ்காட் கல்வியியல் கல்லூரி சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கு நடைபெற்றது.
சேரன்மகாதேவியில் காந்தி சிலை அருகே இருந்து புறப்பட்ட இப்பேரணியை மருத்துவா் வி. சுபாலெட்சுமி தொடங்கி வைத்தாா். மாவட்ட கவுன்சிலா் முருகன், சுகாதார ஆய்வாளா் தமிழ்செல்வன், சுகாதாரத்துறை கல்வியாளா் சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப் பேரணி பிரதான சாலை வழியாக வந்து பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இதைத் தொடா்ந்து ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு முதல்வா் ஏ. பியூலா தலைமை வகித்தாா். இதில், புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மருத்துவா், மாவட்ட சுகாதார ஆலோசகா், கல்லூரி உயிரியல் துறை பேராசிரியா் என். சங்கரேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாணவி தேவி பேச்சியம்மாள் வரவேற்றாா். மாணவி பியூலா நன்றி கூறினாா்.