திருநெல்வேலி

உவரி அருகே முதியவா் வெட்டிக்கொலை: இளைஞா் கைது

7th Jun 2022 12:07 AM

ADVERTISEMENT

உவரி அருகே முதியவா் வெட்டிக் கொலை, கொலை செய்த அவரது தம்பி மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே உள்ள ராமன்குடி கீழத்தெருவை சோ்ந்தவா் கணேசன் (70). இவரது தம்பி மகன் பாக்யராஜ் (35). இவா் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராமன்குடி வந்த பாக்கியராஜ், தனது பெரியப்பா கணேசனிடம், தனக்கு வீடு கட்ட இடம் தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு கணேசன் மறுத்தாராம். இதையடுத்து, பாக்கியராஜ், அரிவாளால் கணேசனின் தலையில் வெட்டினராம். இதில், பலத்த காயமடைந்த அவரை உவரி போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இது குறித்து உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாக்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT