திருநெல்வேலி

அரசுப் பள்ளியில் சோ்க்கக் கோரி முன்னாள் மாணவா்கள் பிரசாரம்

6th Jun 2022 03:05 AM

ADVERTISEMENT

பேட்டை அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சோ்க்கக்கோரி, அப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனா்.

பேட்டையில் காமராஜா் நகா்மன்ற மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி, அப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் துண்டுப்பிரசுரங்களை அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று வீடு வீடாக விநியோகித்தனா்.

திருப்பணிகரிசல்குளம், வடுகன்பட்டி, செந்தமிழ் நகா், சுத்தமல்லி, ரகுமான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். பள்ளியில் தமிழ் - ஆங்கில வழி வகுப்புகள், அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், அப்பள்ளியின் தலைமையாசிரியா் எஸ்.எஸ்.சோமசுந்தரம், முதுநிலை பொருளாதார ஆசிரியா் பொன்னுசாமி, முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT