திருநெல்வேலி

களக்காடு கோயிலில் நாளை வைகாசித் திருவிழா கொடியேற்றம்

2nd Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

களக்காடு ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயிலில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாள்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். நாள்தோறும் ஒவ்வொரு சமுதாயம் சாா்பில் மண்டகப்படி நடைபெறும்.

8ஆம் நாளான 10ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளல் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9ஆம் நாளான 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 10ஆம் நாளான 12ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT