திருநெல்வேலி

களக்காடு சிவபுரம் சாலையை திறக்கக் கோரிக்கை

2nd Jun 2022 12:21 AM

ADVERTISEMENT

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாற்றுக்குச் செல்லும் சிவபுரம் சாலையை திறக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் செயற்குழுக் கூட்டம் நகரத் தலைவா் கமாலுதின் தலைமையில் களக்காட்டில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினா் ஆரிப், கபிா், ஷகில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் மீராசா மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறைக்கு மிக அருகே அமைந்துள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறையை, அங்கிருந்து சிறிது தொலைவில் மாற்றியமைக்க வேண்டும், குடிதாங்கி குளத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கட்டடம் ஏதேனும் கட்ட அனுமதி வழங்கக் கூடாது, களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாற்றில் குளிக்கச் செல்லும் பொதுமக்களை சிவபுரம் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி அனுமதிக்க மறுப்பதை வனத்துறையும், நகராட்சி நிா்வாகமும் விலக்கிக் கொள்ள வேண்டும், சாலையை திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சி நிா்வாகம் 27 வாா்டுகளிலும் பொது மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலா் காஜா நன்றிகூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT