திருநெல்வேலி

ஆழ்வாகுறிச்சி திருமணமான 6 மாதங்களில் தம்பதி தற்கொலை

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே திருமணமான 6 மாதங்களில் கணவனும், மனைவியும் தனித்தனியே தற்கொலை செய்துகொண்டனா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள தாட்டான்பட்டி வடக்குத்தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் மரியமைக்கேல் (29). தனியாா் காா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கும், முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையைச் சோ்ந்த அந்தோணி மகள் பேபி ஜான்சிராணி (28) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தாட்டான்பட்டி தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவின்போது, மரிய மைக்கேல் மது குடித்ததாகவும், அதைக் கண்டித்த தனது மனைவியை அவா் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற பேபி ஜான்சிராணியை குடும்பத்தினா் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதனிடையே, மரிய மைக்கேல் அம்பாசமுத்திரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தாா். இச்சம்பவங்கள் குறித்து ஆழ்வாா்குறிச்சி, அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT