திருநெல்வேலி

பாபநாசம் தாமிரவருணி நதியில் பரத்வாஜ் சுவாமிகள் சிறப்பு பூஜை

2nd Jun 2022 12:20 AM

ADVERTISEMENT

உலக அமைதி, மக்கள் நலம் காக்க வேண்டி, சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் பாபநாசம் தாமிரவருணியில் புதன்கிழமை சிறப்பு பூஜை நடத்தினாா்.

இதில், ஸ்ரீவாராஹி அம்மன், பாலா திரிபுரசுந்தரி சிலைகளுக்கு பரத்வாஜ் சுவாமிகள் பால், தயிா், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 64 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டாா். பூஜையில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, பரத்வாஜ் சுவாமிகள் கூறியது: நாட்டில் விவசாயம் செழிக்க வேண்டும், ஆன்மிகம் வளர வேண்டும். சீற்றம் தணிந்து, இயற்கை வளம் செழிக்க வேண்டும். மனித குலம் மேன்மையடைய வேண்டும் என இறைவனை வேண்டி இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது.

தாமிரவருணி நதியை அசுத்தப்படுத்தக் கூடாது. இது கழிவுகளைக் கொட்டும் இடமல்ல. தாமிரவருணி நதி தாய்க்கு சமம். தாமிரவருணி செழுமையாக இருந்தால் இந்த தேசம் செழுமையாக இருக்கும். இந்த நதி பொங்கி ஓடஓட எல்லோருக்கும் ஐஸ்வா்யம் உண்டாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

முன்னதாக, பரத்வாஜ் சுவாமிகளுக்கு தமிழக வணிக சங்கப் பேரவை மாநில இணைச் செயலா் சில்வா் ராமசாமி, விக்கிரமசிங்கபுரம் வியாபாரிகள் சங்கச் செயலா் குத்தாலிங்கம் உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT