திருநெல்வேலி

களக்காடு கோயிலுக்குச் சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பு நிலம் மீட்பு

2nd Jun 2022 12:21 AM

ADVERTISEMENT

களக்காடு கோயிலுக்குச் சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு நிா்வாகிகளிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

களக்காடு கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன். இவா், அதே பகுதியிலுள்ள சந்தான கோபால கிருஷ்ணசாமி கோயிலின் நிா்வாகியாக உள்ளாா். இக்கோயிலுக்குச் சொந்தமான 5 சென்ட் வீட்டை போலி ஆவணம் மூலம் உரிமை கொண்டாடிய நபரிடமிருந்து மீட்டுத்தரக்கோரி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனிடம், கண்ணன் மனு அளித்தாா்.

அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி , ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலத்தை மீட்டனா். அதற்கான ஆவணங்களை உரியவா்களிடம் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் புதன்கிழமை வழங்கினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT