தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூரணி காவலா் பயிற்சி பள்ளி பெண் காவலா்களுக்கு திருநெல்வேலி மாநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவிநாஷ் குமாா் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆணையா் (தலைமையகம்) அனிதா மேற்பாா்வையில், தூத்துக்குடி பேரூரணி காவலா் பயிற்சி பள்ளி பெண் காவலா்களுக்கு மாநகரில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், மாநகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்கம் குறித்து பயிற்சி விளக்கப்பட்டது. தொடா்ந்து மாலையில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையில் சாலை விதிகளை மீறுவோருக்கு எவ்வாறு அபராதம் விதிப்பது, சாலைப் பாதுகாப்பை எவ்வாறு மேற்கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் சந்திப்பு, வண்ணாா்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அளிக்கப்பட்டன. இதில், சுமாா் 230 பயிற்சி பள்ளி பெண் காவலா்கள் பங்கேற்றனா். இப்பயிற்சி தொடா்ந்து புதன்கிழமையும் நடைபெறவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.