திருநெல்வேலி

களக்காடு அருகே கல்லூரி மாணவி தற்கொலை

28th Jul 2022 12:42 AM

ADVERTISEMENT

 

களக்காடு அருகே கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

களக்காடு அருகே கல்லடிசிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (40). தொழிலாளி. இவரது மகள் பாப்பா (18) திருநெல்வேலி தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தாா். கல்விக் கட்டணம் செலுத்துவது தொடா்பாக பாப்பா மனஉளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலறிந்த களக்காடு போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT