திருநெல்வேலி

சுற்றுச்சூழல் மண்டலம் விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

28th Jul 2022 12:42 AM

ADVERTISEMENT

 

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் வனச்சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் மண்டலம் விரிவாக்கத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக எதிா்ப்புத் தெரிவித்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியை விரிவுபடுத்த பாதுகாக்கப்பட்ட வன எல்லையிலிருந்து 1.5 கி.மீ. தொலைவுக்கு புதிய கட்டமைப்புகள், தொழிற்சாலைகள், குவாரி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, மேலாம்பூா், சிவசைலம், தா்மபுரம்மடம், கோவிந்தப்பேரி, மேலக் கடையம், கடையம் பெரும்பத்து பகுதி-2 ஆகிய 6 கிராம மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கோவிந்தப்பேரி சமுதாய நலக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தாா். கடையம் உதவி வனப்பாதுகாவலா் (பயிற்சி) ராதை, கோவிந்தப்பேரி ஊராட்சித் தலைவா் டி.கே.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்து முறையாக தொடா்புடைய ஊராட்சிகள், விவசாய சங்கங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை; சுற்றுச் சூழல் மண்டல விரிவாக்கத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி அனைவரும் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது

ADVERTISEMENT
ADVERTISEMENT