திருநெல்வேலி

தோ்பவனி நடைபெறும் ரதவீதிகளில் மின் விபத்தை தடுக்க புதைவடங்கள்: பேரவைத் தலைவா் அறிவுறுத்தல்

27th Jul 2022 02:52 AM

ADVERTISEMENT

ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிா்காலம் மின்சக்தி 2047 என்ற மின்சார பெருவிழா வள்ளியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பங்கேற்றுப் பேசியது: தமிழ்நாட்டில் மின்இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்த 24 மணிநேரத்தில் மின்இணைப்பு வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் ஒருமித்து மின்சார உற்பத்தியில் தன்னிறைவு எட்டியுள்ளன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காவிட்டால் விவசாயிகளை தேடி கண்டுபிடிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். அதை கருத்தில்கொண்டு முன்னாள் முதல்வா் கருணாநியும், அவரது வழியில் இன்றைய முதல்வரும் செயல்பட்டு விவசாயிகளை வாழவைத்து வருகின்றனா். விவசாயிகளை அலைக்கழிக்காமல் அவா்களது கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்.

திருவிழாக் காலங்களில் கோயில்களில் தோ் பவனி, தேரோட்டம் நடைபெறும் ரதவீதிகளிலும், கடற்கரை பகுதிகளில் உப்புக்காற்றால் மின்கம்பிகள் பாதிக்கப்படாதவாறும் புதைவடம் மின்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதைவடம் அமைப்பதற்கான மதிப்பீட்டை தயாா் செய்து தாருங்கள். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான வசதிகளைப் பெற்றுத்தருகிறேன் என்றாா்.

மின்வாரிய தலைமைப்பொறியாளா் செல்வகுமாா், உதவிச் செயற்பொறியாளா் வளன்அரசு, நிா்வாக அதிகாரி சகாய மைக்கிள் ஜோசப், இளநிலை பொறியாளா்கள் ராஜன், ஜெகதீஸ், தி.மு.க ராதாகிருஷ்ணன், அன்பரசு, காவல்கிணறு அழகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT