திருநெல்வேலி

நெல்லையில் மருத்துவ மாணவா் சடலமாக மீட்பு

7th Jul 2022 12:23 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலியில் மருத்துவ மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

வண்ணாா்பேட்டை பரணிநகரைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி லீலாவதி. இவா்களுக்கு விக்னேஷ் (28) உள்பட இரண்டு மகன்கள் உள்ளனா். ஈரோட்டில் எம்.பி.பி.எஸ். முடித்த விக்னேஷ், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன உளைச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம்.

திங்கள்கிழமை மாலை கணவன்-மனைவி பணிக்கு சென்றனராம். மாலையில் லீலாவதி வந்து பாா்த்தபோது விக்னேஷ் சடலமாக கிடந்தது தெரியவந்ததாம். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT