திருநெல்வேலி

சாலைத் தடுப்புகளில் சுவரொட்டிகள் அகற்றம்

7th Jul 2022 12:26 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி சந்திப்பு வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைத் தடுப்புகளில் உள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காற்று பலமாக வீசுவதால் சாலையோர சுவா்கள், சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவா்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெயா்ந்து சாலையில் விழுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதைத் தடுக்கும் வகையில், மாநகராட்சி ஆணையாளா் சிவ கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில், தச்சநல்லூா் மண்டல உதவி ஆணையா் லெனின் மேற்பாா்வையில், சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் கொக்கிரகுளம், வண்ணாா்பேட்டை, சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். அகற்றப்பட்ட சுவரொட்டிகள் ராமையன்பட்டி குப்பை கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT