திருநெல்வேலி

மாநகராட்சி குறைதீா் கூட்டம்: மனுக்கள் குவிந்தன

7th Jul 2022 12:24 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணைமேயா் கே.ஆா்.ராஜு தலைமை வகித்தாா். ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். சிறு தொழில் மற்றும் இரவுநேர வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருநெல்வேலி சந்திப்பு த.மு.சாலையில் இரவு நேர சிற்றுண்டி கடை வைப்பதற்கு அனுமதி வழங்க கோரியிருந்தனா். கரும்புலி குயிலி பேரவையினா் அளித்த மனுவில், தச்சை மண்டலம் உலகம்மன் கோயில் தெருவில் உள்ள பழுதடைந்த குடிநீா் தொட்டியினை சரி செய்து தரவும், வள்ளுவா் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் நுகா்வோா் விழிப்புணா்வு அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருநெல்வேலி நகரம் அண்ணாதெரு, மேலரதவீதி ஆகிய பகுதிகளில் சாக்கடையினை தூா்வாரிடவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலப்பாளையத்தை சோ்ந்த மாற்றுத்திறனாளி ஹக்மைதீன் மூன்று சக்கர வாகனம் வழங்க கோரியும், வளா்மதி என்பவா், தனது மகன் மனவளா்ச்சி குறைபாடு உள்ள மாற்றுதிறனாளி எனவே அவனுக்கு மாநகராட்சி கடை ஒன்றினை ஆா்ச் அருகே ஓதுக்கி தரவும், செண்பகம் நகா் பொது மக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் சீரான குடிநீா் வசதி செய்து தரவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

பேட்டை ஸ்ரீநிவாசா நகா் குடியிருப்போா் நலச்சங்கத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், 18 ஆவது வாா்டிற்குள்பட்ட பிரதான சாலையில் ஆக்கிரமிப்பாளா்கள் முள்வேலி அமைக்க முயற்சிப்பதாகவும், அதைதடுத்து சாலை வசதி, தெருவிளக்கு வசதி செய்து தர கோரியிருந்தனா்.

பாளையங்கோட்டை காமராஜா்காலனி இனியன் என்ற செந்தில்முருகன் அளித்த மனுவில், சமாதானபுரம் 36 ஆவது வாா்டு காமராஜா் காலனி தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்பில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்படும் கழிவுநீரோடை மற்றும் பாலங்களை சீரமைத்திடவும், பாதாளச் சாக்கடை திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்திடவும் கோரியிருந்தாா்.

மனுக்களை பெற்ற துணை மேயா் கே.ஆா்.ராஜூ சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தினாா். மண்டல தலைவா் கதிஜாஇக்லாம்பாசிலா, உதவி ஆணையா் (நிா்வாகம்) வெங்கட்ராமன், தச்சை உதவி ஆணையா் (பொ) லெனின், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் (பொ) ஐயப்பன், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையா் ஜஹாங்கீா் பாஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT