திருநெல்வேலி

பேராத்து செல்வியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

7th Jul 2022 12:24 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அருள்மிகு பேராத்து செல்வியம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா புதன்கிழமை (ஜூலை 6) நடைபெற உள்ளது.

தாமிரவருணி கரையோரம் உள்ள பழமைவாய்ந்த இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்தனா். அதன்படி கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. யாகசாலை பூஜைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா். திருமுறை பாராயணம், பூா்ணாஹுதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

புதன்கிழமை (ஜூலை 7) காலை 3 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 6 மணிக்கு மேல் பேராத்து செல்வியம்மன், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. முற்பகல் 11.30 மணி முதல் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பேராத்து செல்வியம்மன், வண்ணை முத்தாரம்மன் வீதியுலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT