திருநெல்வேலி

பாளை.யில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

7th Jul 2022 12:26 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டையில் சிஐடியூ சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் நலவாரிய பதிவு புதுப்பித்தல் மனுக்களில் உள்ள ஆன்லைன் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். நலவாரிய மனுக்களை நேரடியாக சமா்ப்பிக்க அனுமதி வழங்க வேண்டும், நலத்திட்ட பயன்களை காலதாமதம் இல்லாமல் வழங்கிட வேண்டும், மாத ஓய்வூதியம் ரூ.3000 ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளா் துறை அலுவலக பணியாளா்களின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்கத்தின் பொதுச் செயலாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். தையல் சங்கத்தின் பொதுச் செயலா் கீதா முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலா் ஆா்.மோகன் தொடங்கி வைத்தாா். நிா்வாகிகள் முருகன், பெருமாள், மரிய ஜான் ரோஸ், சுடலைராஜ், வண்ணமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT