திருநெல்வேலி

பாளை.யில் பாஜக ஆா்ப்பாட்டம்

7th Jul 2022 12:23 AM

ADVERTISEMENT

 

பாஜக சாா்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை கண்டிப்பது; மக்களுக்கு சுமையாக திகழும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காத திமுக தலைமையிலான மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவா் அ.தயாசங்கா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் நயினாா்நாகேந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்ட பொதுச்செயலா்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், மணிகண்டன் நிா்வாகிகள் கு. முருகதாஸ், தமிழ்செல்வன், மகளிரணி மாநில நிா்வாகி மருத்துவா் தீபா, மாநில இளைஞரணி துணைத் தலைவா் நயினாா் பாலாஜி, சிவசூா்யநாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT