திருநெல்வேலி

அம்பையில் ஒரே நாளில் 2 கோயில்களில் உண்டியல் திருட்டு

5th Jul 2022 02:30 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரத்தில் ஒரே நாளில் 2 கோயில்களில் மா்ம நபா்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே உள்ள ஆற்றுப் பாலத்தடி இசக்கியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனா். மற்றொரு கல் உண்டியலை உடைக்க முயன்றுள்ளனா். கோயில் நிா்வாகி சுப்பையா கொடுத்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் உள்ள வண்டிமறிச்சம்மன் கோயில் கதவையும் மா்ம நபா்கள் உடைத்து உள்ளே புகுந்து, கல் உண்டியலை உடைக்க முயன்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT