திருநெல்வேலி

அம்பையில் கஞ்சா விற்றதாக தம்பதி கைது

5th Jul 2022 02:30 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரத்தில் கஞ்சா விற்ற தம்பதியை போலீஸாா் கைது செய்து, 2.3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

அம்பாசமுத்திரத்தில் உள்ள கல்லூரிச் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் சந்திரமோகன், போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அவ்வழியே வந்த பிரம்மதேசத்தைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் சின்னதம்பி (52) என்பவரை சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், அவருக்கு உதவியாக இருந்ததாக அவரது மனைவி ரஞ்சனியையும் (42) போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT