திருநெல்வேலி

சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் தேரோட்டம்

5th Jul 2022 02:29 AM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் ஆனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூன் 24ஆம் தேதி ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 8ஆம் திருநாளான ஜூலை 1ஆம் தேதி மாலை நாராயணசுவாமி பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. 11ஆம் திருநாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், களக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT