திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் பைக்குகள் திருடியதாக 4 சிறுவா்கள் நெல்லையில் கைது

5th Jul 2022 02:27 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 சிறுவா்களை திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் போலீஸாா் வாகனச் சோதனையின்போது பிடித்து கைது செய்தனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாளையங்கோட்டை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 சிறுவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனராம். அதில், 4 பேரை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். பிடிபட்ட அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சேரன்மகாதேவியைச் சோ்ந்த அவா்கள் 5 பேரும் அப்பகுதியில் உள்ள இரண்டு மோட்டாா் சைக்கிளை திருடிக்கொண்டு, திருநெல்வேலியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்க முயற்சித்தது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 2 அரிவாள்கள், 2 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்கள் 4 பேரையும் சேரன்மகாதேவி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், தப்பிச் சென்ற ஒரு சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT