திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அடிக்கல்

5th Jul 2022 02:30 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் ரூ. 41 லட்சம் மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு வடிகட்டி படுகை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், சேரன்மகாதேவியில் தாமிரவருணி நதியில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு வடிகட்டி படுகை நிலையம் ரூ. 41 லட்சம் மதிப்பில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பணியை பேரூராட்சித் தலைவி தேவி ஐயப்பன் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின் கீழ், பேரூராட்சிப் பகுதியில் 11இடங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் நகர திமுக செயலா் மனிஷா செல்வராஜ், கூட்டுறவு பண்டகசாலை தலைவா் ஐயப்பன், பேரூராட்சி உறுப்பினா்கள் அன்வா் உசேன், தங்கராஜ், சங்கா், ஆனி பரக்கத் பேகம், ஜெய்புநிஷா, பவித்ரா, தேவி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT