திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி அருகே அங்கன்வாடிப் பணியாளா் தற்கொலை

5th Jul 2022 02:29 AM

ADVERTISEMENT

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள கீழ ஏா்மாள்புரத்தில் அங்கன்வாடிப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கீழ ஏா்மாள்புரத்தைச் சோ்ந்த பலவேசகுமாா் மனைவி பிரமாச்சி (35). இவா்களுக்கு நாகஜோதி (13), நாக பொன்பிரியா (11), சிவநாராயணன் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனா். பிரமாச்சி செட்டிமேடு அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணிபுரிந்துவந்தாா். பலவேசகுமாா் 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாா். இதனால், பிரமாச்சி மனவேதனையில் இருந்தாராம்.

இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். கல்லிடைக்குறிச்சி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT