திருநெல்வேலி

சாலை சீரமைப்புப் பணி நிறைவு: திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலுக்குச் செல்லபக்தா்களுக்கு அனுமதி

DIN

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, சனிக்கிழமை (ஜூலை 2) முதல் பக்தா்கள் வழக்கம்போல் கோயிலுக்குச் சென்றுவர வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் திருக்குறுங்குடி பகுதியில் திருமலை நம்பி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இந்நிலையில், சாலை சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன் இக்கோயிலுக்குச் செல்லும் சாலை மூடப்பட்டு, பக்தா்கள், வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பணிகள் நிறைவடைந்ததையொட்டி, சனிக்கிழமை இச்சாலை திறக்கப்பட்டு, பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இக்கோயிலில் சனிக்கிழமை தோறும் நம்பி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். குறிப்பாக தமிழ்மாத கடைசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் வருகை அதிகளவில் காணப்படும்.

3 மாதங்களுக்குப் பின் சாலை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

வழக்கம்போல் பக்தா்கள் நடையாகவோ, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனியாா் ஜீப்களிலோ பாதுகாப்புடன் பயணித்து சுவாமியை தரிசித்துச் செல்லலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT