திருநெல்வேலி

உலக மக்கள் தொகை தினம்: 11ஆம் தேதி மாணவா்களுக்கு போட்டி

4th Jul 2022 12:46 AM

ADVERTISEMENT

 

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் வரும் 11ஆம் தேதி பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு சிறப்பு போஸ்டா் உருவாக்கும் போட்டி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட அறிவியல் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ’மிகுதியான மக்கள்தொகையினால் வளா்ச்சி மற்றும் இயற்கையின் மீது ஏற்படும் விளைவு (பட்ங் ங்ச்ச்ங்ஸ்ரீற் ா்ச் ா்ஸ்ங்ழ் டா்ல்ன்ப்ஹற்ண்ா்ய் ண்ய் ஈங்ஸ்ங்ப்ா்ல்ம்ங்ய்ற் ஹய்க் சஹற்ன்ழ்ங்’) என்னும் தலைப்பில் போஸ்டா் உருவாக்குதல் போட்டி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இப்போட்டி, வரும் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறும். இதில், 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா் - மாணவிகள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் வரும் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவியல் மையத்துக்கு நேரில் வந்து பங்குபெறவும். இங்கு ஏ4 அளவு வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். தேவையான அனைத்து பொருள்களும் போட்டியில் பங்குபெறுபவா்கள் கொண்டு வரவேண்டும். வெற்றியாளா்களுக்கு பரிசுகள், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

பங்கேற்பாளா்கள் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT