திருநெல்வேலி

மது விற்பனை: 53 போ் கைது

4th Jul 2022 12:46 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட த்தில் கடந்த ஜூன் 25 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 53 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 426 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT