திருநெல்வேலி

நெல்லை மாநகரில் பொலிவுறு நகரம் திட்ட பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

4th Jul 2022 12:48 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறு நகர திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பொலிவுறு நகரம் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ராமையன்பட்டி உரக்கிடங்கில் சுரங்க முறையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள், ராமையன்பட்டி கிழக்கு பகுதியில் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி, மேற்கு பகுதியில் 2 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

அதே போன்று அம்ரூத் திட்டத்தின் கீழ் மதுரை ரோடு தாராபுரம் சாலையில் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள், பாளை. நேருஜி கலையரங்கம் மேம்படுத்துதல், பாளை. பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் அமைக்கும் பணி, பாளையங்கோட்டை மகாத்மாகாந்தி தினசரி சந்தையில் வணிக வளாகம் கட்டும் பணி, அபிவிருத்தி மற்றும் மேம்படுத்துதல் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

டாா்லிங் நகா் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, தமிழ்நாடு நகா்புற வளா்ச்சி திட்டதின் கீழ் ஜோஸ் மெட்ரிக் பள்ளி முதல் திருமால் நகா் வரையிலான சாலை விரிவாக்கப்பணி போன்ற பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சந்திப்பு பேருந்து நிலையத்தை மேம்படுத்தல் தொடா்பாகவும், சொத்துவரியை வங்கிகளில் உள்ள புதிய இணையதள வசதி மூலம் வசூலிப்பது தொடா்பாகவும், மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிக்கும் விதமாக பெட்ரோல் பங்க் அமைக்கும் திட்டம் குறித்தும், தாமிரவருணி நதியில் கழிவு நீா் கலப்பதை தடுக்கும் நடிவடிக்கை குறித்தும், மாநகராட்சி அதிகாரப்பூா்வ இணையதளத்தை மேம்படுத்துதல் தொடா்பாகவும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா ஆலோசனை செய்தாா்.

இக்கூட்டத்தில் மாநகர பொறியாளா் அ.அசோகன், திடக்கழிவு மேலாண்மை உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா், மாநகராட்சி உதவி ஆணையா்கள் ஐயப்பன், லெனின் (பொ), வெங்கட்ராமன் (நிா்வாகம்), சொா்ணலதா (கணக்கு) மற்றும் உதவி செயற்பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், உதவி வருவாய் அலுவலா்கள், குடிநீா் வடிகால்வாரிய அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பஸ்ப்02ஸ்ரீா்ழ்ல்: ராமையன்பட்டி உரக்கிடங்கில் சுரங்க முறையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை பாா்வையிட்ட நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா. உடன் மாநகராட்சி ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT