திருநெல்வேலி

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாடு

4th Jul 2022 12:48 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் 4ஆவது மாவட்ட மாநாடு பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓய்வு பெற்ற முதல்வா் ராமகுரு தலைமை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா் தியாகராஜன் முன்னிலை வைத்தாா்.

மாவட்டச் செயலா் குமாரசுவாமி வரவேற்றாா். மாநிலச் செயலா் வில்சன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா்.

ADVERTISEMENT

மாநில பொதுச்செயலா் நம்புராஜன், மாநகராட்சி உறுப்பினா் முத்து சுப்பிரமணியன், முன்னாள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி. பாஸ்கரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவா் பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து மாலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியை சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் தியாகராஜன் தொடங்கி வைத்தாா்.பேரணி பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தொடங்கி மாநகராட்சி திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT