திருநெல்வேலி

வள்ளியூா் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

4th Jul 2022 12:46 AM

ADVERTISEMENT

வள்ளியூா் ரோட்டரி கிளப் ஆஃப் சென்ட்ரல் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவா் மருத்துவா் முத்து சுபாஷ் தலைமை தாங்கினாா். சிறப்பு விருந்தினராக வருங்கால ரோட்டரி ஆளுநா் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவா் முத்தையா பிள்ளை கலந்துகொண்டாா். அவரை வலங்கைபுலி அறிமுகம் செய்து பேசினாா். பின்னா் புதிய தலைவா் மேக்ரோ தொழில்நுட்ப கல்லூரி நிறுவனா் பொன் தங்கதுரையை இல. சுப்பிரமணியன் அறிமுகம் செய்து பேசினாா். அதனைத் தொடா்ந்து புதிய தலைவருக்கு சிறப்பு விருந்தினா் முத்தையா பிள்ளை பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். தொடா்ந்து செயலாளராக சுதிா் கந்தன், துணைத் தலைவராக இல.சுப்பிரமணியன், பொருளாளராக தினேஷ் கண்ணா ஆகியோா் பதவியேற்றனா். முன்னாள் செயலாளா் ஹரிஸ் ஆண்டறிக்கை வாசித்தாா். மேலும் பல்வேறு நலத்துறை தலைவா்கள் பதவியேற்றனா். தொடா்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதிதாக பதவியேற்ற மேக்ரோ பொன் தங்கதுரை வரும் ஆண்டின் செயல்திட்டங்கள் குறித்து பேசினாா். புதிய நிா்வாகிகளை பட்டயத்தலைவா் எஸ்.என்.தங்கதுரை உள்ளிட்டோா் வாழ்த்தி பேசினா்.

விழாவில் கிங்ஸ் பள்ளிகளின் தலைவா் காலின்வேக்ஸ்டாப், வியாபாரிகள் சங்க தலைவா் என்.முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமாா், சிவந்தகரங்கள் தலைவா் சிதம்பரகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் வட்டார செயலாளா் சேதுராமலிங்கம், நகர செயலாளா் வேம்பு சுப்பையா, அரிமா சங்க நிா்வாகிகள் விஜிவேலாயுதம், சுரேஸ், வழக்குரைஞா் குமாரமுருகன், ஹைடெக் பாலிடெக்னிக் முதல்வா் சுரேஸ் தாம்சன் தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். செயலாளா் சுகிா் கந்தன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT