திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

DIN


திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் 516-ஆவது ஆனிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் ஆனித் தேரோட்டம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனித் தேரோட்டம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பூங்கோயில் சப்பரம் உள்வீதி உலா நடை பெற்றது. அதைத் தொடர்ந்து கொடியேற்றம், கொடிமரத்தின் முன்பு மஹாதீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி-அம் பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.

ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் கரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோயிலுக்கு வருபவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் இம்மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின்  3 ஆவது பெரிய தேரான சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 450 டன், அகலம் 28 அடி,நீளம் 28 அடி, உயரம் அலங்கார தட்டுகளை சேர்த்து சுமார் 70 அடியாகஅமைந்துள்ளது.  நெல்லையப்பர் கோயில் தேர் 515  ஆண்டுகளாக பக்தர்கள் மூலம் மனித சக்தியால்  மட்டுமே இழுக்கப்பட்டுவருகிறது.

இந்தாண்டு 516 ஆவது தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.  நாள்தோறும் சுவாமி அம்பாள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தேரோட்டம் நடைபெறும் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடிப்பர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதால், திருநெல்வேலி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தென் தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு விழிப்புணா்வு பேரணி

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

SCROLL FOR NEXT