திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை

3rd Jul 2022 01:45 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி நகரத்தில் எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி நகரம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (62). எலக்ட்ரீசியனான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதையடுத்து அவரை குடும்பத்தினா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கா் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளாா்.

அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT