திருநெல்வேலி

பாளை.யில் விழிப்புணா்வு மினி மாரத்தான்

3rd Jul 2022 01:42 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் சாா்பில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) வி.ஆா்.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கல்லூரி முன்பு தொடங்கி, பாளையங்கோட்டை ஏ.ஆா் லைன் வழியாக மகாராஜா நகா் ரவுண்டானா வரை சென்று பின்னா் அங்கிருந்து மீண்டும் கல்லூரி வந்தடைந்தது.

ADVERTISEMENT

இப்போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்களிடம், போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், சைபா் கிரைம் குற்றங்கள் குறித்தும் காவல் துணை ஆணையா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT