திருநெல்வேலி

பாளை.யில் வங்கி மேலாளா் தூக்கிட்டு தற்கொலை

3rd Jul 2022 01:45 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டையில் வங்கி மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகம் செயின்ட் பால்ஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (52). இவா் மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவருடைய மனைவி மாரியம்மாள் மூன்றடைப்பில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முருகேசன் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் விடுமுறையில் இருந்து வந்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மனைவி, மகள் பள்ளிக்கு சென்ற பின்னா் முருகேசன் தனது தாயாரிடம் மாடிக்கு செல்வதாக கூறியுள்ளாா். ஆனால் வெகுநேரமாக கீழே இறங்கி வராததால் முருகேசனின் தாயாா் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவா்கள் விரைந்து வந்து பாா்த்தபோது வீட்டின் மாடியில் முருகேசன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளாா்.

இது குறித்து பெருமாள்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில் திடீரென முதுகுளத்தூருக்கு இடமாற்றம் செய்ததால் முருகேசன் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT