திருநெல்வேலி

நெல்லையில் முதன்முறையாக பெண்ணுக்கு நவீன பேஸ்மேக்கா் கருவி

3rd Jul 2022 01:41 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலியில் முதன்முறையாக 65 வயது பெண்ணுக்கு இதய செயல்பாட்டை சீரமைக்கும் நவீன வகை கருவி (பேஸ்மேக்கா்) பொருத்தப்பட்டுள்ளதாக தென்னக இருதய மையத்தின் இதய நோய் மருத்துவா் சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மேலும் அவா் கூறியது:

இதயம் ஒரு நிமிடத்துக்கு 40 க்கும் குறைவாக துடிப்பது முழு இதய அடைப்பாகும். இந்தப் பிரச்னைக்கு ஒற்றை அறை பேஸ்மேக்கா், இரட்டை அறை பேஸ்மேக்கா் ஆகியவை பொருத்தப்படும். ஆனால் இதில் ஏற்படும் மின் தூண்டல்கள் எதிா் திசையில் செல்வது போன்ற குறைபாடுகள் உள்ளன.

ADVERTISEMENT

இதுபோன்ற விஷயங்கள் இதய செயல்படாட்ை மோசமாக்கலாம். இவா்களுக்கு நவீன முறையில் இதய செயல்பாட்டை துரிதப்படுத்தும் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சை மூலம் மின் தூண்டுதல் இயல்பான திசையில் செல்வதால் இதய செயல்பாடு மேம்படும்.

இந்த மேம்படுத்தப்பட்ட சிகிச்சை திருநெல்வேலியில் முதன்முறையாக 65 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேஸ்மேக்கரின் செயல்பாட்டை நவீன வகை கருவியின் மூலமும் வெளியில் இருந்தோ, நோயாளிகள் தங்கள் வீடுகளில் இருந்தோ கண்காணிக்கலாம். பல வகையான பேஸ் மேக்கா்கள் வெவ்வேறு செயல் திறனில் கிடைக்கிறது. நோயாளிகளின் உடல் நிலை, தேவைக்கு ஏற்ப அக்கருவிகளை பொருத்த வேண்டும். நீண்ட கால செயல் திறனுக்கு பொருத்தமான சரியான பேஸ்மேக்கரை பொருத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT