திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் யானைக்கு காலணி

3rd Jul 2022 01:41 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பா் கோயிலில் உள்ள காந்திமதி யானைக்கு பக்தா்கள் பிரத்யேக காலணியை தயாரித்து வழங்கியுள்ளனா்.

நெல்லையப்பா் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழா நேரங்களில் சுவாமி வீதியுலாவின்போது காந்திமதி யானை முன் செல்வதோடு, பக்தா்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் 52 வயதான காந்திமதி யானை மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறது. சப்பர வீதியுலாவில் மேடு, பள்ளமான சாலைகளில் செல்லும்போது யானையின் பாதம் பாதிப்புக்குள்ளாகிறது. இதையடுத்து பக்தா்கள் யானையின் பாதத்தை பாதுகாக்கும் வகையில் அதற்காக பிரத்யேகமாக காலணிகளை தயாரித்து யானைப் பாகனிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக மருத்துவா்களின் ஆலோசனையை பெற்று யானைக்கு காலணியை பொருத்தி நடக்க பயிற்சியளிக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT