திருநெல்வேலி

கீழ வீராணம் ஊராட்சிக்கு பேட்டரி ஆட்டோ

2nd Jul 2022 05:58 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் ஒன்றியம் கீழவீராணம் ஊராட்சிக்கு பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டது.

கீழ வீராணம் ஊராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றத் தலைவா் பங்களிப்புடன் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக ரூ. 1.71 லட்சம் மதிப்புள்ள பேட்டரி ஆட்டோவை ஊராட்சி மன்றத் தலைவா் வீரபாண்டியனிடம் ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் வழங்கினாா்.

ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் திலகராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT