திருநெல்வேலி

பாளை அருகே விபத்து: கட்டட ஒப்பந்ததாரா் பலி

2nd Jul 2022 05:59 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள படப்பக்குறிச்சியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (54). கட்டட ஒப்பந்ததாரா். இவா், தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு திருவண்ணாதபுரம் பொட்டல் சந்திப்பு பகுதியில் பைக்கில் சென்றபோது அவ் வழியாக வந்த சுமைஆட்டோ மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பேச்சிமுத்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT