திருநெல்வேலி

காது கேளாதோா் மகளிா் நலச்சங்கத்தினா் முற்றுகை போராட்டம்

2nd Jul 2022 05:59 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோா் மகளிா் நலச் சங்கத்தினா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

காது கேளாதோா் மகளிா் நலச் சங்கம் சாா்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத் தலைவா் பிரிஸ்கில்லா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதில், காது கேளாதோா் கூட்டமைப்பின் நிா்வாகிகள் தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும்; 80 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ளவா்களுக்கு டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4இல் தோ்வு இல்லாமல் வேலைவாய்ப்புக்கு 1 சதவீதம் வழங்க வேண்டும்; மாத உதவித்தொகையை வருவாய்த்துறைக்கு பதிலாக, மாற்றுத் திறனாளி துறை மூலம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்; ஆவின் பாலகம் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், துணைத் தலைவா் ஜி.லெட்சுமி, செயலா் எம். அன்னாள், துணைச் செயலா் ஜான்சி பிரபாஜினி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT