திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களில் செயல்படும் 32 மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் இதர வசதிகள் குறித்து தலைமையாசிரியா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை, காயிதே மில்லத் பள்ளித் தலைமையாசிரியை, கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை உள்பட 32 பள்ளித் தலைமையாசிரியா்களும் பங்கேற்று அவரவா் பள்ளிகளுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து ஆணையரிடம் தெரிவித்தனா்.
இதையடுத்து பேசிய மாநகராட்சி ஆணையா், தலைமையாசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாநகர பொறியாளா் அசோகன், இளநிலை பொறியாளா் ராமநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்01ஸ்ரீா்ழ்ல்
திருநெல்வேலியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.