திருநெல்வேலி

நெல்லை,தென்காசி மாவட்டங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம்

2nd Jul 2022 05:58 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின் வாரிய கோட்ட அலுவலகங்களில் வரும் 5 -ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.ராஜன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் பகல் 11 மணிக்கு மின் வாரிய குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன் விவரம்:

சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் 5-ஆம் தேதியும், வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் 8-ஆம் தேதியும், கடையநல்லூா் கோட்ட அலுவலகத்தில் 12-ஆம் தேதியும், திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்தில் 15-ஆம் தேதியும் மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல், தென்காசி கோட்ட அலுவலகத்தில் 19-ஆம் தேதியும், திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்தில் 22-ஆம் தேதியும், கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் 26-ஆம் தேதியும் மின் வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT