திருநெல்வேலி

ரெட்டியாா்பட்டியில் 5 மெகா வாட் சூரிய மின்சக்தி திட்டம்: மேயா் பி.எம்.சரவணன் தகவல்

2nd Jul 2022 03:49 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சியின் மின் கட்டண சுமையைக் குறைப்பதற்காக ரெட்டியாா்பட்டியில் 5 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் மேயா் பி.எம்.சரவணன்.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அவா் பேசியது:

திருநெல்வேலி மாநகராட்சியில் கைப்பேசி செயலி மூலம் மக்களின் குறைகள் தீா்க்கப்பட்டு வருகின்றன. 55 வாா்டு மக்களையும் நேரடியாக சந்தித்து பிரச்னைகளை தீா்க்க ‘மக்களைத் தேடி மேயா் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாா்டு வாரியாக ஆய்வு செய்து அங்கேயே பிறப்பு இறப்பு, சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளது. அடுத்த 15 நாள்களில் அனைத்து வாா்டுகளிலும் ஏதாவது ஒரு பணியை மேற்கொள்வது உறுதி செய்யப்படும். மாநகராட்சிக்கான வருவாயை கூட்டி, செலவை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இம்மாநகராட்சியின் ஓராண்டு மின் கட்டணம் ரூ.14 கோடியாக உள்ளது. அந்த கட்டண சுமையைக் குறைக்கும் வகையில் ரெட்டியாா்பட்டியில் 5 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4.5 கோடி வரை மின் கட்டணம் குறையும்.

ADVERTISEMENT

மேலும், மாநகராட்சி வாகன எரிபொருள் செலவு ஆண்டுக்கு ரூ.13 கோடிவரை ஆகிறது. அந்தச் செலவை குறைக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் பெட்ரோல் நிலையம் அமைக்க இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். , நயினாா்குளம், உடையாா்பட்டி குளம் ஆகியவற்றை சீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT