திருநெல்வேலி

இலந்தகுளத்தில் திமுக சாா்பில் நல உதவி

1st Jul 2022 01:05 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பாளையங்கோட்டை 32 ஆவது வாா்டுக்குள்பட்ட இலந்தகுளம் பகுதியில் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் தலைமை வகித்தாா். ஏழை-எளியோருக்கு இலவச வேட்டி- சேலைகள், கல்வி உதவித்தொகை, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வழக்குரைஞரணி மாவட்ட அமைப்பாளா் ஏ.எல்.பி.தினேஷ், பாளை. பகுதிச் செயலா் அண்டன் செல்லத்துரை, 32 ஆவது வட்டச் செயலா் கதிரேசன், மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள், மகளிரணி அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT