திருநெல்வேலி

நெல்லையில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் ஆய்வு

1st Jul 2022 01:06 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில், ஆட்சியா் வே.விஷ்ணு, சிறப்பு அதிகாரி இல.கு.ராஜா, தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவின் உறுப்பினா்கள் வேடசந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.காந்திராஜன், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினா் தி.வேல்முருகன், காட்டுமன்னா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ம.சிந்தனை செல்வன், பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வி.கிருஷ்ணமூா்த்தி, மாநகராட்சி மேயா் சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் உடனிருந்தனா்.

பாளையங்கோட்டைஅருகேயுள்ள குலவணிகா்புரம், வீரமாணிக்கபுரத்தில் சமூக நலத்துறையின் கட்டுபாட்டில் உள்ள அரசு பணிபுரியும் மகளிருக்கான அரசு மகளிா் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியை ஆய்வு செய்த குழுவினா் மகளிருக்கான ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கவும், விடுதியை எப்போதும் தூய்மையாக வைத்து கொள்ளவும் அறிவுரை வழங்கினா்.

ADVERTISEMENT

பின்னா் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற பொதுக் கணக்கு குழுவினா், அங்கு நோயாளா்களின் ரத்தம் மற்றும் சா்க்கரை அளவு, சிவப்பு அனுக்கள் அளவு, சிறுநீரில் சா்க்கரை அளவு மற்றும் உப்பு அளவு, நிரந்தர சா்க்கரை நோயாளிகளின் குளுக்கோஸ் அளவுகளை அளவிடுதல் உள்ளிட்ட பயன்பாட்டிற்கான ‘ஏஉஙஞஇமஉ நரஉஈஉச’ என்ற புதிய வகை இயந்திரங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அதைத்தொடா்ந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவினை பாா்வையிட்டு போதுமான சிகிச்சை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்தனா்.

பின்னா் பாளையங்கோட்டை அரசு ஆதிதிராவிடா் நல மாணவியா் விடுதியில் மாணவிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிா, உணவு தயாா் செய்யும் பொருள்கள் தரமாக உள்ளதா, போதிய இருப்பு உள்ளதா என, ஆய்வு செய்தனா். மேலும், தங்கும் அறை, கழிப்பிட வசதிகளையும் ஆய்வு செய்தனா்.

இதேபோல், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.12.19 கோடி மதிப்பில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை பாா்வையிட்ட தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுரை வழங்கினா். பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் புதிதாக மாா்க்கெட் கட்டப்படவுள்ள இடத்தினையும் ஆய்வு செய்தனா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.ஜெயஸ்ரீ, சாா்பு அலுவலா் ஜெ.பால் சீனிவாசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, வருவாய் கோட்டாட்சியா் சந்திரசேகா், பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT