திருநெல்வேலி

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கோதைச்சேரி நாளை சிறப்பு பதிவு முகாம்

1st Jul 2022 01:00 AM

ADVERTISEMENT

 

களக்காடு ஒன்றியம், கோதைசேரி சமுதாயநலக்கூடத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சிறப்பு பதிவு மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை (ஜூன் 30) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ.குலசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நல வாரியம் மற்றும் இதர 17 உடலுழைப்பு தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு கல்வி, உதவி, திருமணம், மகப்பேறு ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நல வாரியங்களில் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

கடந்த 19-ஆம் தேதி முதல் பதிவு கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதள முகவரியில் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் இணையதளம் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி அதிகளவில் நல வாரியங்களில் பதிவு செய்வதற்கான சிறப்பு பதிவு மற்றும் விழிப்புணா்வு முகாம் நான்குனேரி வட்டம், களக்காடு நகராட்சி திருமண மண்டபத்தில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 30)) நடைபெறவுள்ளது. எனவே, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT