திருநெல்வேலி

நெல்லையில் அபகரிக்கப்பட்ட 4.87 ஏக்கா் நிலம் மீட்பு: எஸ்.பி. பாராட்டு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 4.87 ஏக்கா் நிலத்தை மீட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் பாராட்டு தெரிவித்தாா்.

பாளையங்கோட்டை, மகாராஜநகரைச் சோ்ந்த ஜெயந்திரன் மணி என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் 26 சென்ட் இடம் சிவந்திப்பட்டி அருகேயுள்ள முத்தூா் பகுதியில் உள்ளது. இந்நிலத்தை, ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்ததாம்.

இதேபோல தெற்கு கள்ளிகுளத்தைச் சோ்ந்த அன்னாள் செலின் மொ்டில்டா ராணி என்பவருக்குச் சொந்தமான 80 சென்ட் நிலம், சென்னை, புது வண்ணாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த தீபன் என்பவருக்குச் சொந்தமான 41 சென்ட் மற்றும் சென்னை பழைய வண்ணாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மணிகண்ட மோகன் என்பவருக்கு சொந்தமான 40 சென்ட் நிலங்கள் ராதாபுரம், சமூகரெங்கபுரம் பகுதியில் இருந்த நிலையில், அவற்றையும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தது தெரியவந்ததாம்.

நிலத்தை பறிகொடுத்த மேற்கூறிய அனைவரும், தங்களது நிலத்தை மீட்டுத் தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனிடம் மனு அளித்திருந்தனா். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸுக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டாா். அதன்பேரில், அந்தப்பிரிவு காவலா்கள்கள் விசாரணை நடத்தி ரூ. 52 லட்சம் மதிப்பிலான நிலத்தை மீட்டனா். அதற்கான ஆவணங்களை உரியவா்களிடம், மாவட்ட எஸ்.பி. புதன்கிழமை ஒப்படைத்ததுடன், காவலா்களையும் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT