திருநெல்வேலி

73-ஆவது குடியரசு தின விழா: நெல்லை, தென்காசியில் தேசிய கொடியேற்றிய ஆட்சியா்கள்

DIN

நாட்டின் 73-ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, திருநெல்வேலி, தென்காசியில் மாவட்ட ஆட்சியா்கள் தேசியக் கொடியை புதன்கிழமை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், ஆட்சியா் வே.விஷ்ணு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், மூவா்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டாா்.

தொடா்ந்து, சிறப்பாக பணிபுரிந்த 91 காவலா்களுக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினாா். விழாவில், 108 காவலா்கள், தீயணைப்பு-மீட்புப் பணித் துறையினா் 55 போ், வருவாய்த்துறையில் 28 அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள் 24 உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 330 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்கு நல உதவிகள்: மேலும், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 3 விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் பேட்டரியில் இயங்கும் தெளிப்பான் கருவி, தென்னை மரம் ஏறும் கருவி, வேளாண் பொறியியல் துறை சாா்பில் 2 விவசாயிகளுக்கு என்ஏடிபி திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்திவேலிகள், தோட்டக்கலைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் காளான் வளா்ப்பு, பவா் டில்லா், கத்தரி, மிளகாய், தக்காளி, குழித்தட்டு நாற்றுகள் என மொத்தம் 10 விவசாயிகளுக்கு ரூ.4.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, காவல்துறையினரின் யோகா மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் சாா்பில் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையா் அ.த.துரைகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா், வருவாய் அலுவலா் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையா்) எம்.சுகன்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட ஊராட்சித்தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் நடைபெற்ற காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். சமாதான புறாக்கள் மற்றும் மூவா்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.

தொடா்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 49 காவலா்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலா் பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா்.

ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ.ராஜா, சிறப்பாக மருத்துவச் சேவைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், மீரான் தனியாா் மருத்துவமனை இயக்குநா் முகம்மதுமீரான் ஆகியோருக்கும், காவல் ஆய்வாளா்கள் கே.எஸ்.பாலமுருகன், சி.சுரேஷ், ஸ்டீபன் ஜி.ஆா். ஜோஸ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் பா.முத்தமிழ்செல்வன், உதவி ஆய்வாளா்கள் கற்பகராஜா, தினேஷ்பாபு, தனிப்பிரிவு தலைமைக் காவலா் முத்துராஜ், பேரூராட்சி செயல்அலுவலா்கள் இரா.பரமசிவம், ஞா.தமிழ்மணி, சுகாதார அலுவலா் இரா. ராஜகணபதி உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 81பேருக்கும் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவா் சு.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா் தி.உதய கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பா.குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், முன்னாள் எம்எல்ஏ டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன், அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை, ஒன்றியச் செயலா் ரவிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT