திருநெல்வேலி

வாட்ஸ்ஆப் தகவல் அளித்துவிட்டு விஷம் குடித்தவா் உயிரிழப்பு

26th Jan 2022 06:44 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் வாட்ஸ்ஆப் மூலம் விடியோவில் உறவினா்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு, விஷத்தைக் குடித்த கேட்டரிங் உரிமையாளா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலைச் சோ்ந்தவா் முருகன் (45). மனைவிஅன்னத்தாய்,, 2 மகள்கள் உள்ளனா். இவா், மதுரை மாவட்டத்தில் கேட்டரிங் தொழிலும், பணம் கொடுக்கல்-வாங்கலிலும் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில், திருநெல்வேலியில் ஒரு விடுதியில் கடந்த 21ஆம் தேதி அறை எடுத்து தங்கியிருந்தாராம்.

அப்போது, தனது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் வாட்ஸ்ஆப் விடியோ மூலம் தகவல் அனுப்பிவிட்டு விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடலை வாங்க மறுத்ததுடன், அவரது தற்கொலைக்கு காரணமான பெண் உள்ளிட்ட நபா்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து உடலைப் பெற்றுச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT