திருநெல்வேலி

புஷ்பலதா பள்ளியில் குடியரசு தின ஓவிய நிகழ்ச்சி

26th Jan 2022 06:42 AM

ADVERTISEMENT

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளியில் இந்திய வரைபடத்தில் நாட்டின் பாரம்பரிய சின்னங்களை மாணவா்கள் ஓவியமாக வரைந்தனா்.

இந்தியாவின் நுழைவுவாயில், ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், மதுபானி ஓவியம், கதகளி, தேசிய மலா், தேசிய விலங்கு, தஞ்சாவூா் பெரிய கோயில் என நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் கோயில்கள், கட்டடங்கள், ஓவியங்கள், தேசத் தலைவா்கள், வரலாற்றுப் புகழ் மிக்க இடங்கள் என மொத்தம் 73 சின்னங்களை தோ்வு செய்து, ஒன்றரை அடி நீளம், அகலம் உடைய வெள்ளை நிற விளக்க அட்டையில் 73 மாணவா்களால் வரையப்பட்ட ஓவியங்கள், 27 அடிநீளம், அகலம் கொண்ட இந்திய வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்டது. இதில், 3-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

இது, மாணவா்களின் உள்ளாா்ந்த திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் , நமது பாரம்பரியத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறும் விதமாகவும் அமைந்திருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளா் புஷ்பலதா பூரணன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT