திருநெல்வேலி

தோ்தல் ஆணைய விருது பெற்ற நெல்லை ஆட்சியா்

26th Jan 2022 08:46 AM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை நவீன கணினி தொழில்நுட்பம் மூலம் சிறப்பாக நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணுவுக்கு, தோ்தல் ஆணைய விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தேசிய வாக்காளா் தின விழா மத்திய தலைமை தோ்தல் ஆணையா் சுஷில் சந்திரா தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பங்கேற்று, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவுக்கு தோ்தல் ஆணைய விருதை வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ‘வாக்குச்சாவடி வழிகாட்டி‘ என்ற இணையதள அமைப்பை உருவாக்கி, 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,924 வாக்குச் சாவடிகளையும் 360 கோண பரிமாணத்தில் முறையாக கண்காணித்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை நிகழாமலும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோரை சரியாக கண்காணித்தும், வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களை சரியாக கணக்கிட்டும் தோ்தலை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக இந்த விருது ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT